தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அச்சம்! 5 ஆண்டுகளில் காலாவதியாகும் அரசு கட்டடம்

அச்சம்! 5 ஆண்டுகளில் காலாவதியாகும் அரசு கட்டடம்

அச்சம்! 5 ஆண்டுகளில் காலாவதியாகும் அரசு கட்டடம்


UPDATED : செப் 19, 2026 09:34 PM

ADDED : செப் 19, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 09:34 PM ADDED : செப் 19, 2026 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி:
சிங்கம்புணரி தாலுகாவில் 5 ஆண்டுகளில் சில அரசு கட்டடங்கள் காலாவதியாகி வரும் நிலையில் பள்ளி கூரை இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்கிறது.

இத்தாலுகாவில் 20 ஆண்டுகளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்ட கட்டடங்களில் சில தரம் இல்லாமல் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை, சுற்றுச்சுவர் ஆகியவை தரம் இல்லாமல் கட்டப்பட்டு அவற்றில் சில கட்டடங்கள் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளாகவே இடிக்கப்பட்டு வருகிறது.

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி போன்ற இடங்களில் கட்டுமானங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தொடக்கப்பள்ளி கட்டடங்களும் சில இடங்களில் தரம் இல்லாமல் கட்டப்படுகிறது. சிங்கம்புணரி ஒன்றியம் கோழிக்குடிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் கட்டப்படும் போதே, அது தரம் இல்லாமல் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. ஆனால் அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு மாணவர்கள் வருகை தர இருந்த சில மணி நேரத்திற்கு முன் வாசலில் உள்ள கூரை இடிந்து விழுந்தது. இதனால் மாணவர்கள் உயிர் தப்பினர். பள்ளி வேலை நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்து இருந்தால் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும். பல பள்ளிகளில் மராமத்துக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுவதில்லை.

பணிகள் முடித்த ஓரிரு மாதங்களிலேயே மீண்டும் கட்டடங்கள் ஒழுகத் துவங்கி இடியத் தொடங்கி விடுகிறது. இப்பணிகளையும் அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது இல்லை. விபத்துகள் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக அரசு கட்டடங்கள், குறிப்பாக பள்ளிக்கட்டடங்கள் முறையாக கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளில் நடக்கும் மராமத்து பணிகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us