தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு

ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு

ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு


UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM

ADDED : ஜூன் 03, 2024 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM ADDED : ஜூன் 03, 2024 09:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு ஜூன் 5ல் நடக்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மைய நுாலகர் இளங்கோ கூறியிருப்பதாவது:

அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு ஜூன் 9ல் நடக்கவுள்ளது.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகம், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச மாதிரி தேர்வு ஜூன் 5ல் மாவட்ட மைய நுாலகத்தில் காலை 10:00 மணிக்கு நடக்கவுள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அலைபேசி எண்களான 94864 83723, 94423 21554, 99407 60347 எண்களில் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us