UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM
ADDED : ஜூலை 20, 2024 10:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
வங்கியாளர்கள் கல்வி கடன் வழங்குவது குறித்து கல்லுாரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர், மாணவ, மாணவியருக்கு பயிற்சி மற்றும் கலந்தாலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:
மாணவ, மாணவியருக்கு கல்வி கடன் பெற தேவையான ஆவணங்கள், சான்றிதழ்களை, வித்யாலட்சுமி, ஜன்சமர்த் ஆகிய இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை பற்றி, கல்லுாரி நிர்வாகத்துக்கும் பயிற்சி தரப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு, 2024-25ம் கல்வி ஆண்டில், 5,000 மாணவ, மாணவியருக்கு, 70 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.