UPDATED : செப் 26, 2024 12:00 AM
ADDED : செப் 26, 2024 01:03 PM
யாத்கிர்:
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் ஊட்டச்சத்தான உணவு வழங்கும் திட்டத்தை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா நேற்று துவக்கி வைத்தார்.
யாத்கிரியின், அரகேரா கே கிராமத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்தத் திட்டத்தை, அமைச்சர் மது பங்காரப்பா துவக்கி வைத்தார்.
இதில் அவர் பேசியதாவது:
மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்களும் ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படும்.
பெங்களூரு அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநிலத்தின் அனைத்து அரசு நர்சரி பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஆறு நாட்களும் முட்டை வழங்கப்படும். மாநிலத்தின் 57 லட்சம் மாணவர்கள், இந்த சலுகையால் பயன் பெறுவர். இந்த திட்டத்தில் அஜீம் பிரேம்ஜி கைகோர்த்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.