UPDATED : மார் 21, 2016 12:00 AM
ADDED : மார் 21, 2016 11:14 AM
மதுரை
: பிளஸ் 2 வேதியியல் தேர்வில் இடம்பெற்ற குழப்ப
வினாக்களுக்காக மாணவர்களுக்கு 6 மதிப்பெண்கள் வழங்க வேண்டும், என, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் அச்சங்க மாநில துணை தலைவர்
முகிலன் கூறியதாவது:
மார்ச் 14ல் நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற 18வது வினா பாடத்திட்டத்தில் இல்லை. பத்து மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட கட்டாய வினா பகுதியும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
மேலும், மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான கட்ஆப் பாதிக்கும். எனவே இக்கேள்விகளை எழுத முயற்சித்து இருந்தாலே 6 மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுத்துறை இயக்குனருக்கு இது தொடர்பான மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.
