தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 7ல் கிருஷ்ணகிரியில் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி

வரும் 7ல் கிருஷ்ணகிரியில் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி

வரும் 7ல் கிருஷ்ணகிரியில் ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி


UPDATED : அக் 05, 2026 03:09 PM

ADDED : அக் 05, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 03:09 PM ADDED : அக் 05, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
வரும், 7ல், கிருஷ்ணகிரியில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு பேரணி நடக்க உள்ளது.

இது குறித்து சேலம் கலெக்டர் இளம் பகவத் அறிக்கை:


கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அக்., 7ல் ஆட்சேர்ப்பு பேரணி நடக்க உள்ளது.

விண்ணப்பதாரர்கள், https://www.jionindianarmy.noc.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும், அதில் கொடுக்கப்பட்டுள்ள, தேவையான வடிவத்தில் மட்டும் எடுத்து வர வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆட்சேர்ப்பு பேரணிக்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இணையதள முகவரியில் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு சென்று பேரணி தொடர்பான புதுப்பிப்புகளை சரி பார்த்து கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, 0422 2222022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கை முற்றிலும் தானியங்கி முறையில், வெளிப்படை தன்மையுடன் நடக்கும். யாரையும் தேர்ச்சி பெற செய்யவோ, ராணுவத்தில் சேர்த்து விடுவதாக கூறும் இடைதரகர்கள், நிறுவனங்கள் குறித்து விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us