சென்னையில் 8ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையில் 8ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
UPDATED : டிச 07, 2023 12:00 AM
ADDED : டிச 07, 2023 05:32 PM
அ நிறம் | அளவு
சென்னை:
புயல் வெள்ளம் பாதிப்பு காரணமாக, சென்னையில் நாளையும் (டிச., 8) பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச., 4 முதல் டிச., 7 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் டிச., 8ம் தேதியும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
