தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலியிடம் 800: பரிதாப நிலையில் பார்மசிஸ்ட்கள்

காலியிடம் 800: பரிதாப நிலையில் பார்மசிஸ்ட்கள்

காலியிடம் 800: பரிதாப நிலையில் பார்மசிஸ்ட்கள்


UPDATED : ஜன 30, 2010 12:00 AM

ADDED : ஜன 30, 2010 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2010 12:00 AM ADDED : ஜன 30, 2010 01:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக மருத்துவத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக பார்மசிஸ்ட்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.


தற்போதுள்ள நிலையில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி,அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 800 பணியிடங்களே காலியாக உள்ளன. ஆனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பார்மசிஸ்ட்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டி உள்ளது.இந்நிலையில் பார்மசிஸ்ட் படித்தவர்களுக்கு அரசு வேலை கிடைப்பது மிகவும் சிரமமான விஷயமாகவே உள்ளது.


தற்போதய நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்மசிஸ்ட்களின் பணியிடங்களை அதிகரித்தல், மருந்து விநியோகிக்கும் இடங்களில் தலைமை மருந்தாளுநர்கள், மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்குதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு தலைமை மருந்தாளுர், மூன்று மருந்தாளுநர்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டாலும் கூடுதலாக 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்க முடியும்.


இது குறித்து வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும் பார்மசிஸ்ட்கள் கூறியதாவது: அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி கால்நடை ஆஸ்பத்திரிகளிலும் முறையாக படித்த பார்மசிஸ்ட்டுகளே மருந்து, மாத்திரைகளை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் மாநிலம் முழுவதும் எங்குமே இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே படித்து முடித்து காத்திருக்கும் பார்மசிஸ்ட்களுக்கு கால்நடைத்துறையிலும் வேலை வழங்கினால், தற்போது பதிவு செய்தவர்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது அரசு வேலை பெறும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us