UPDATED : ஆக 24, 2011 12:00 AM
ADDED : ஆக 24, 2011 12:28 PM
புதுச்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 9ம் தேதி துவங்குகிறது.
தற்போது புதுச்சேரி பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 645 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்களுக்கு தனியாக அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. http://www.centacprof.net.in/ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்-ஆப் அட்டவணையைப் பார்த்து தகுதியுடைய மாணவர்கள் தாங்களாக கலந்தாய்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9, 10, 12 13 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களையும், ரூ.400க்கான டிடி (எஸ்சி., எஸ்டி மாணவர்கள் 150) எடுத்து வர வேண்டும். டிடியை தி கவர்னர், சென்டாக் என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
