தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீலகிரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

நீலகிரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

நீலகிரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது


UPDATED : செப் 03, 2011 12:00 AM

ADDED : செப் 03, 2011 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2011 12:00 AM ADDED : செப் 03, 2011 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டத்தில் 9 தலைமை ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அரசு சார்பில் நடப்பாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் 9 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், செவனன், அரசு மேல்நிலைப்பள்ளி காத்தாடி மட்டம்; சந்திரன், அரசு மேல்நிலைப்பள்ளி கூடலூர்; ஜோஸ், அரசு மேல்நிலைப்பள்ளி பிதர்காடு;ராமலிங்கம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மஞ்சூர்; மனோகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெட்டட்டி; பெள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கொல்லிமலை; மாதன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிளன்மார்கன்; பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பிதர்காடு; கேசவன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெள்ளேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சென்னையில் கல்வி துறை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us