தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிப்., 9 முதல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவக்கம்

பிப்., 9 முதல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவக்கம்

பிப்., 9 முதல் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவக்கம்


UPDATED : பிப் 05, 2015 12:00 AM

ADDED : பிப் 05, 2015 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2015 12:00 AM ADDED : பிப் 05, 2015 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 9ம் தேதி முதல் துவங்கி, இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும், வரும் மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளது. 8.8 லட்சம் மாணவர்கள், இந்த தேர்வை எழுத உள்ளனர்.

தேர்வுக்கு முன்னதாக, இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான செய்முறை நடத்தப்பட உள்ளது. இன்று முதல், வரும் 23ம் தேதிக்குள், செய்முறைத் தேர்வு நடத்த கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலைக்கேற்ப, இரு கட்டங்களாக செய்முறைத் தேர்வு நடத்தி, 23ம் தேதிக்குள் முடிக்க, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 167 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வரும் 9ம் தேதி முதல், 14ம் தேதி வரை முதற்கட்டமாகவும்; 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை, இரண்டாம் கட்டமாகவும், செய்முறைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us