UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி :
கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர் சங்கத்தின் மலைச்சாரல் சிறப்பு கவியரங்கம் நடந்தது. மன்றத் தலைவர் பெள்ளி தலைமை வகித்தார். செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார்.
இதில், புவி வெப்பமாதல் மற்றும் அழிந்து வரும் குடும்ப உறவுகள் என்ற தலைப்புகளில் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் ஜெனிதா, சுந்தரபாண்டியன், மகேந்திரன், விவே ராஜூ, பிரேம்குமார், நிர்மலா, சங்கரன் மற்றும் திலகா உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
நிகழ்ச்சியில், மீனா முன்னிலையில், யோகா நிகழ்ச்சியும், முதியோர் இல்லம் நடத்தி வரும் பிலிப் முன்னிலையில், முதியோர்களின் இன்றைய நிலை குறித்து பேசப்பட்டது.