தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எச்.1 பி விசா அதிகரிக்கும்: ‘நாஸ்காம்’ நம்பிக்கை

எச்.1 பி விசா அதிகரிக்கும்: ‘நாஸ்காம்’ நம்பிக்கை

எச்.1 பி விசா அதிகரிக்கும்: ‘நாஸ்காம்’ நம்பிக்கை


UPDATED : நவ 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு, இந்திய சாப்ட்வேர் அண்ட் சேவை நிறுவனங்களின் அமைப்பான ‘நாஸ்காம்’ வாழ்த்து தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் மற்றும் பி.பி.ஓ., நிறுவனங்களுக்கு 60 சதவீதம் வருவாய் அமெரிக்காவில் கிடைக்கிறது. அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமா, அவுட்சோர்சிங் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், பொருளாதார மந்தமான சூழ்நிலையில்  அமெரிக்கர்கள் வேலை இழப்போர் எண்ணிக்கை அதிகமாயின. தற்போது, ஒபாமா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவுட்சோர்சிங் பணியில் பாதிப்பு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நாஸ்காம் அமைப்பு, ஒபாமாவின் வெற்றியை வரவேற்றுள்ளது.
அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய அதிபரின்  நிர்வாகத்தின்கீழ் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துள்ளோம். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு மேம்படுவதற்கான வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.
உலக பொருளாதாரம் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்கவும், தொழில் ரீதியான கைதேர்ந்த தொழிலாளர்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியாவும்  அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் எச்.1 பி விசா வழங்குவதை ஒபாமா அரசு விரிவுபடுத்தும் என நம்புகிறோம்.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்திய ஐ.டி., தொழில் விற்பன்னர்கள் முக்கிய காரணிகளாக உள்ளனர். எனவே எச். 1 பி விசா திட்டங்களை விரிவுப்படுத்த நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். அமெரிக்க அரசு, அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து   தொடர்ந்து செயல்பட ‘நாஸ்காம்’ தயாராக உள்ளது. இவ்வாறு நாஸ்காம் அறிக்கையில் கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us