10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நிலத்தடி நீர் குறித்த பாடம் அவசியம்
10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நிலத்தடி நீர் குறித்த பாடம் அவசியம்
UPDATED : மே 23, 2026 03:34 PM
ADDED : மே 23, 2026 03:36 PM
பெங்களூரு:
கர்நாடகாவில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், நிலத்தடி நீரின் முக்கியத்துவம் குறித்து தனி அத்தியாயம் சேர்க்கக் கோரி என்.சி.இ.ஆர்.டி.,க்கு, சிறிய நீர்பாசனத்துறை அமைச்சர் போசராஜு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, அவர் அளித்த பேட்டி:
உலகில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். எனவே, பள்ளி மாணவர்களுக்கு நிலத்தடி நீர் குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இது குறித்து, என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நிலத்தடி நீரின் முக்கியத்துவம் குறித்து, தனி அத்தியாயத்தை 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளேன். என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.
பூமியில் உள்ள நன்னீரில், 97 சதவீதம் நிலத்தடி நீரே. இந்தியாவில் வீட்டு உபயோகத்துக்கு 50 சதவீதமும், விவசாயத்திற்கு 25 சதவீதமும் நிலத்தடி நீர் பயன்படுகிறது.
நிலத்தடி நீரின் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும், 1 சதவீதம் அதிகரித்து வருகிறது. எனவே, நிலத்தடி நீர் குறித்து மாணவர்களிடம் கட்டாயம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது, தான் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
