தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது புதுச்சேரி, காரைக்காலில் 8,080 பேர் எழுதினர்

10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது புதுச்சேரி, காரைக்காலில் 8,080 பேர் எழுதினர்

10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது புதுச்சேரி, காரைக்காலில் 8,080 பேர் எழுதினர்


UPDATED : மார் 12, 2026 06:44 PM

ADDED : மார் 12, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2026 06:44 PM ADDED : மார் 12, 2026 06:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.

இத்தேர்வை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 174 பள்ளிகளை சேர்ந்த 8,096 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக, புதுச்சேரியில் 20 மையங்களும், காரைக்காலில் 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று நடந்த தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வை புதுச்சேரியில் 7,060 பேரும், காரைக்காலில் 1,020 பேர் என மொத்தம் 7,080 பேர் எழுதினர்.

புதுச்சேரியில் 12 பேரும், காரைக்காலில் 3 பேரும் தேர்வு எழுதவில்லை. புதுச்சேரியில் பிரஞ்சு பாடத் தேர்வில் இருந்து ஒருவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களுக்குள் மொபைல் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களுக்கு அனுமதிக்கவில்லை. தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கியது. மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் வினாக்களை படித்து பார்க்கவும், 5 நிமிடங்கள் விடைத்தாளில் மாணவர்கள் தங்களது குறிப்புகளை பதிவு செய்து சரிபார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.

காலை 10:15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத துவங்கினர். மதியம் 01:15 மணிக்கு தேர்வு முடிந்தது. தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி முடிவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us