தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம்!


UPDATED : நவ 14, 2015 12:00 AM

ADDED : நவ 14, 2015 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2015 12:00 AM ADDED : நவ 14, 2015 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-07 கல்வி ஆண்டில்௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் கட்டாயம் அதன்படி, இக்கல்வி ஆண்டில் (2015-16) பத்தாம் வகுப்புக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது. மார்ச்சில் நடக்க உள்ள பொதுத்தேர்வில் பகுதி-1ல் முதல் மொழிப்பாடமாக தமிழை எழுத வேண்டும்.

கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:

கடந்த கல்வி ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பிரஞ்சு ஆகிய மொழிப்பாடங்களை பகுதி-1ல் மாணவர்கள் எழுதிவந்தனர். ஆனால் இக்கல்வி ஆண்டில் பகுதி-1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கூட்டுத்தொகை பகுதி-2ல் ஆங்கிலம், பகுதி-3ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குப்பின், பகுதி-4ல் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண் இருக்கும். ஆனால் கூட்டுத் தொகையில் சேர்க்கப்படாது. இக்கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும்௧ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us