தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10 அரசு கல்லுாரிகளில் கணித பாடப்பிரிவு மூடல்

10 அரசு கல்லுாரிகளில் கணித பாடப்பிரிவு மூடல்

10 அரசு கல்லுாரிகளில் கணித பாடப்பிரிவு மூடல்


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, கல்லுாரி கல்வி மண்டல இணை இயக்குனர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் கீதா அனுப்பிய சுற்றறிக்கை: 
ஒரு சில அரசு கல்லுாரிகளில், மாணவர்களிடையே வரவேற்பு இல்லாத மற்றும் மாணவர் சேர்க்கை குறைந்த பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு அதற்கு பதில் தேவையான புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும் என சட்டசபையில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.இதன்படி, சேந்தமங்கலம், லால்குடி,வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், திட்டமலை, கூடலுார் மற்றும் கோவில்பட்டி ஆகிய 10 ஊர்களில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில், கணித பாடப்பிரிவு நீக்கப்படுகிறது. நாகலாபுரம் கல்லுாரியில், கணினி பயன்பாட்டியல், மொடக்குறிச்சி கல்லுாரியில் இயற்பியல் பாடப்பிரிவு நீக்கப்படுகிறது.அதற்கு பதில், கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில் நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல், விலங்கியல் போன்ற பாடப் பிரிவுகள் துவங்கப்படும். இது தொடர்பாக பல்கலைகளில் உரிய அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us