UPDATED : ஆக 16, 2023 12:00 AM
ADDED : ஆக 16, 2023 06:16 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இம்மாதம் 18ம் தேதி மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்.நடைப்பெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இம்மாதம் 18ம் தேதி காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
