தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம்

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம்

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ல் வினியோகம்


UPDATED : மே 27, 2011 12:00 AM

ADDED : மே 27, 2011 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2011 12:00 AM ADDED : மே 27, 2011 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வரும் ஜூன் 20ம் தேதி பள்ளியில் படித்து தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். தனித் தேர்வர்களுக்கும், அவர்கள் தேர்வெழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.


மதிப்பெண்ணில் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 


இது குறித்து, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது: மறு கூட்டலுக்கான விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதியில் இருந்து, ஜூன் 3ம் தேதி வரை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.


மறு கூட்டல் கட்டணம்:
எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மொழிப்பாடங்களுக்கு, 305 ரூபாய், இதரப் பாடங்களுக்கு, 205,
மெட்ரிகுலேஷன் - ஒவ்வொரு பாடத்திற்கும், 305 ரூபாய்.
ஆங்கிலோ இந்தியன் - மொழிப்பாடம் - 205, இதரப் பாடங்களுக்கு, 305 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us