10ம் வகுப்பு அறிவியல் தேர்வு; 624 பேர் ‘ஆப்சென்ட்’
10ம் வகுப்பு அறிவியல் தேர்வு; 624 பேர் ‘ஆப்சென்ட்’
UPDATED : ஏப் 08, 2016 12:00 AM
ADDED : ஏப் 08, 2016 11:24 AM
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல், துவங்கியது; மாவட்டத்தில் உள்ள, 81 மையங்களில், நேற்று அறிவியல் தேர்வு நடைபெற்றது.
விண்ணப்பித்திருந்த, 29 ஆயிரத்து, 664 பேரில், 29 ஆயிரத்து, 125 மாணவ, மாணவியர் மட்டுமே எழுதினர்; 539 பேர் வரவில்லை. தனித்தேர்வர், 634 பேரில், 549 பேர் பங்கேற்றனர். 11ல், சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
அறிவியல்
தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்
கூறுகையில், கடந்த தேர்வுகளில்
கேட்கப்பட்ட பல முக்கிய வினாக்கள், இம்முறையும்
கேட்கப்பட்டிருந்தன. முக்கிய பகுதிகள் என, ஆசிரியர்களால்
குறிப்பிட்ட பாட பகுதிகளில் இருந்து, அதிக
வினாக்கள் வந்திருந்தன. எந்த பகுதியிலும், கஷ்டமான
வினாக்கள் இல்லாததால், திருப்தியாக தேர்வு
எழுதினோம்.
பலமுறை படித்து, பயிற்சி செய்த வினாவாக இருந்ததால், எளிதாகவும், வேகமாகவும் பதில் எழுத முடிந்தது. அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறுவோம் என்றனர்.
