தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய 51 வயது பெண்

10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய 51 வயது பெண்

10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய 51 வயது பெண்


UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM

ADDED : ஜூலை 05, 2023 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM ADDED : ஜூலை 05, 2023 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூரில் 51 வயது பெண் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதினார்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சேட்டு மனைவி ராகிலா பானு. கடந்த 1989ல் ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு குடும்ப சூழலால் பள்ளி செல்லவில்லை. சத்துணவு மையத்தில் சமையலராக 12 ஆண்டுகளாக பணிபுரிகிறார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஐந்து பாடங்களுக்கு தேர்வெழுதி இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றார். மீதி மூன்று பாடங்களுக்கு தற்போது துணைத்தேர்வு எழுதுகிறார். கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத்தேர்வை ராகிலா பானு  எழுதினார். மகன் சாகுல் அமீது தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார், என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us