தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு துணைத்தேர்வு 2,096 பேர் விண்ணப்பம்

10ம் வகுப்பு துணைத்தேர்வு 2,096 பேர் விண்ணப்பம்

10ம் வகுப்பு துணைத்தேர்வு 2,096 பேர் விண்ணப்பம்


UPDATED : ஜூன் 13, 2026 05:19 PM

ADDED : ஜூன் 13, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 05:19 PM ADDED : ஜூன் 13, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
கடந்த மே 20ம் தேதி வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 29 ஆயிரத்து 13 பேரில், 27 ஆயிரத்து 933 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,080 பேர் தேர்ச்சி பெறவில்லை.

அவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வுக்கு கடந்த மே 27 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்த நிலையில், பள்ளி மாணவர்கள் 1,205 பேரும், தனித்தேர்வர்கள் 891 பேரும் என மொத்தம் 2,096 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான துணைத்தேர்வு ஜூலை 8 முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் விபரங்கள் பாடவாரியாக சேகரிக்கப்பட்டுள்ளன.

துணைத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், மாணவர்கள் நேரடியாக பிளஸ் 1 வகுப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, மாணவர்கள் துணைத்தேர்வை தவறாமல் எழுதுவதுடன், அவர்களுக்கு பெற்றோர்களும் உரிய ஊக்கமும் ஆதரவும் வழங்க வேண்டும் என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us