sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி


UPDATED : மே 20, 2026 11:08 AM

ADDED : மே 20, 2026 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 11:08 AM ADDED : மே 20, 2026 11:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டது.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். மொத்தம் 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* மாணவர்கள்- 92.15 சதவீதம்

* மாணவிகள்-96.47 சதவீதம்

* தனித்தேர்வர்கள்-35.91 சதவீதம்

* சிறைவாசிகள்-95.68 சதவீதம்

வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்:

* அரசுப்பள்ளிகள்-91.86%

* அரசு உதவி பெறும் பள்ளிகள்-94.34%

* தனியார் பள்ளிகள்-98.14%

* இருபாலர் பள்ளிகள்-94.42%

* பெண்கள் பள்ளிகள்-96.42%

* ஆண்கள் பள்ளிகள்- 88.50%

டாப் 5 மாவட்டங்கள்!


1.புதுக்கோட்டை- 97.57 சதவீதம்

2.சிவகங்கை-97.54 சதவீதம்

3.தஞ்சாவூர்-97.41 சதவீதம்

4.திருச்சி-97.31 சதவீதம்

5.கன்னியாகுமரி-97.30 சதவீதம்

பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம்

* தமிழ் -98.43%

* ஆங்கிலம்-99.44%

* கணிதம்-97.36%

* அறிவியல்-98%

* சமூக அறிவியல்-97.93%

100/100 மார்க்!


* தமிழ்- 34 பேர்

* ஆங்கிலம்-92 பேர்

* கணிதம்-3,194 பேர்

* அறிவியல்-10476 பேர்

* சமூக அறிவியல்-3,336 பேர்

100% தேர்ச்சி!


* 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்- 5171

* 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்- 1931

சிறைவாசிகள்


தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

'ரிசல்ட்' பார்ப்பது எப்படி?


மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பயன்படுத்தி, www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் 78452 52525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தங்களது முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைபேசி எண்களுக்கு மெசேஜ் வழியாகவும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us