UPDATED : மார் 11, 2025 12:00 AM
ADDED : மார் 11, 2025 09:18 AM

விழுப்புரம்:
விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், தினமலர் புத்தக அரங்கில், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 2 ம் தேதி புத்தகத் திருவிழா துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் 3வது புத்தக திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், 58 வது அரங்கில் தினமலர் நாளிதழ் சார்பில், தாமரை பிரதர்ஸ் மீடியா புத்தக அரங்கு அமைந்துள்ளது.
இதனை ஏராளமான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இங்கு, 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புத்தகத் கண்காட்சி வரும் 13ம் தேதி நிறைவடைகிறது.