100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது?
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது?
UPDATED : மே 16, 2026 06:03 PM
ADDED : மே 16, 2026 06:05 PM
திருப்பூர்:
பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சியை தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சியை தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்குவதை முந்தைய அரசுகள் வழக்கமாக கொண்டிருந்தது. கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.
7.92 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியதில், 7.53 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி சதவீதம், 95.03. மாநிலத்தில் மொத்தமுள்ள, 7,536 மேல்நிலைப் பள்ளிகளில், 2,639 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன; இவற்றில், 489 பள்ளிகள் அரசு பள்ளிகள்.
வழக்கமாக, பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சியை பெற்றுத்தரும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்.
இதற்காக, மாவட்ட வாரியாக நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை தந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் முழுவிவரங்கள் மாவட்ட கல்வித்துறையால் பெறப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அழைப்பிதழும் அனுப்பி வைக்கப்படும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு, பிளஸ் 2 தேர்வில் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுத்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது நடக்கும் என்ற கேள்வி, சாதனை தலைமை ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
