sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிகள்; ஏப்ரலில் பரிசோதனை

/

100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிகள்; ஏப்ரலில் பரிசோதனை

100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிகள்; ஏப்ரலில் பரிசோதனை

100 நாள் சவாலில் 4,552 துவக்கப்பள்ளிகள்; ஏப்ரலில் பரிசோதனை


UPDATED : மார் 22, 2025 12:00 AM

ADDED : மார் 22, 2025 06:50 PM

Google News

UPDATED : மார் 22, 2025 12:00 AM ADDED : மார் 22, 2025 06:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
வாசிப்புத்திறன் வளர்ப்புக்கு, 100 நாள் சவாலை ஏற்ற, 4,552 துவக்கப்பள்ளிகளின் பெயர் பட்டியலை, தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் - 24,310, நடுநிலைப்பள்ளிகள் - 7,024 உள்ளன. இவற்றில் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட தேசிய கற்றல் அடைவு மதிப்பீட்டில், வாசிப்புத்திறன் மற்றும் கணித அடிப்படைத் திறனில், மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருந்தது.

இதையடுத்து, மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தரத்தில் அல்ல; தமிழ், ஆங்கிலம் எழுத படிக்கக்கூட பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களுக்கு தெரியவில்லை என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு, கொரோனா சூழலால்தான் வாசிப்புத்திறனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என, தமிழக அரசு கூறிவிட்டு, துவக்கப்பள்ளிகளில் வாசிப்புத்திறன், கணித அடிப்படைத் திறன்களை வளர்க்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 100 நாள் சவால் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில் பங்கேற்கும் பள்ளிகள், 100 நாட்களில், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழ், ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன், கணித அடிப்படைத் திறனை அடைந்தவர்களாக மாற்ற வேண்டும் எனக்கூறி, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த சவாலில், 4,552 பள்ளிகள், கடந்த டிசம்பரில் பதிவு செய்தன. தற்போது, 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பொதுவெளி யில் மாணவர்களின் வாசிப்புத்திறன், கணித அடிப்படைத் திறனை சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு சவாலில் பங்கேற்ற பள்ளிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 157 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

இதனால் அடுத்த மாதம், முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில், அந்த பள்ளிகளில் கலெக்டர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்னிலையில், தமிழ், ஆங்கில வாசிப்புத்திறன், கணித அடிப்படைத் திறன் சோதிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us