UPDATED : செப் 20, 2024 12:00 AM
ADDED : செப் 20, 2024 10:28 AM

ஈரோடு:
ஈரோட்டில் நடந்த நான் முதல்வன் -உயர்வுக்கு படி முகாமில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றும், தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கும், நான் முதல்வன்- உயர்வுக்குபடி முகாம் நடக்கிறது. இதன்படி ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன் உயர்வுக்குபடி முகாம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். ஈரோடு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத, உயர் கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 15 பேர் மேற்படிப்புக்காக கல்லுாரியில் சேர்க்கை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட சமூகநல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதிகா, ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத்தில் வரும், ௨௩ம் தேதி முகாம் நடக்கிறது.