தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமேசானில் 1,000 பேர் பணிநீக்கம்

அமேசானில் 1,000 பேர் பணிநீக்கம்

அமேசானில் 1,000 பேர் பணிநீக்கம்


UPDATED : அக் 09, 2026 11:13 AM

ADDED : அக் 09, 2026 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 11:13 AM ADDED : அக் 09, 2026 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
அமேசான் நிறுவனம், உலகளவில் 1000 பேரை பணிநீக்கம் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் இந்தியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நீடித்து வரும் ஆட்குறைப்புப் படலம் ஓயாத நிலையில், ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான அமேசான் நிறுவனம் மீண்டும் ஒரு புதிய பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. 1,000 ஊழியர்களை குறைக்கும் இந்த நடவடிக்கையில் இந்திய ஊழியர்களும் சிக்கித் தவிக்கின்றனர்.
​
திடீர் கல்தா


​அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன்டி ஜாஸியின், செலவுக் குறைப்பு நடவடிக்கை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

இதில், இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள கஸ்டமர் கேர், மார்க்கெட்டிங் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த பணிநீக்கக் கடிதம் வந்துள்ளது. அவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் மனக்குமுறல்களை பதிவிட்டு வருகின்றனர்.

​அமேசான் நிர்வாகம் உறுதி

​இந்த ஆட்குறைப்பை உறுதி செய்துள்ள அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கவும், முன்னுரிமைப் பணிகளில் கவனம் செலுத்தவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சிறிய அளவிலான ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கும் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா காரணம்

​பணிநீக்க நடவடிக்கை குறித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறியதாவது:

கோவிட் காலத்தில் அனைவரும் வீடுகளிலிருந்தபடி பொருட்கள் வாங்கியதால் கடுமையான வேலைப்பளு ஏற்பட்டது. அப்போது தேவைக்கு அதிகமாகவே ஊழியர்களைப் பணியமர்த்திவிட்டோம். தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அதுவே காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us