sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காலை உணவுத் திட்டத்தில் வேலையிழக்கும் 1,000 பெண்கள்?

/

காலை உணவுத் திட்டத்தில் வேலையிழக்கும் 1,000 பெண்கள்?

காலை உணவுத் திட்டத்தில் வேலையிழக்கும் 1,000 பெண்கள்?

காலை உணவுத் திட்டத்தில் வேலையிழக்கும் 1,000 பெண்கள்?


UPDATED : நவ 20, 2025 08:21 PM

ADDED : நவ 20, 2025 08:24 PM

Google News

UPDATED : நவ 20, 2025 08:21 PM ADDED : நவ 20, 2025 08:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்ற ஆயிரக்கணக்கான பெண்கள், அரசின் கெடுபிடியால் வேலையிழக்க உள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில், மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும் வகையில் சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பின், சத்துணவில் முட்டை, பல வகை கலவை சாதங்கள் என ஏழை எளிய மாணவர்கள் நலன் கருதி வழங்கப்படுகிறது.

அந்த வரிசையில் முதல்வரின் காலை உணவுத்திட்டம், கடந்த 2022ல் கொண்டு வரப்பட்டது. அரசுப்பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக செயல்பட்டு வருகிறது. இதற்கான சமையல் பணியில் 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தாய்மார்கள் மட்டுமே ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அறிவுறுத்தலின் பேரில், பள்ளியில் படிக்காத மாணவர்களின் தாய்மார்களும் சமையல் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கென சில 'லகரங்களை கையூட்டாகவும்' பெற்றுள்ளனர்.

போதுமான ஊதியம் இல்லாத நிலையிலும், மதிய சத்துணவு பொறுப்பாளர் மற்றும் சமையலர் பணிக்கு நிகராக காலை உணவுத் திட்டம் இருக்கும் என்ற நினைப்பில், பலரும் பணத்தை கொடுத்து பணியிடங்களை பெற்றனர்.

இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் அந்தந்த மாவட்ட திட்ட இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'காலை உணவுத் திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தாய்மார்களா என்பதை உறுதி செய்து, பள்ளி மேலாண்மைக்குழு ஒப்புதல் பெற்று அறிக்கை அனுப்புமாறு வெளியிடப்பட்டுள்ளது.'

இதனால் பலர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அல்லாது தி.மு.க.,வினரை நம்பி பல லட்சம் செலவழித்த நபர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற அரசின் உத்தரவால் உ.பி.,க்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா 4 முதல் 5 பணியாளர்கள் வரை தகுதியில்லாத நிலையில், காலை உணவுத் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us