10ம் வகுப்பு மற்றும் +1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ல் வெளியீடு
10ம் வகுப்பு மற்றும் +1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ல் வெளியீடு
UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 12:29 PM

சென்னை:
2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வுகளின் முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.00 மணிக்கும், மேல்நிலை முதலாம் ஆண்டு முடிவுகள் பிற்பகல் 2.00 மணிக்கும் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்.
மேலும், மாணவர்கள் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் வழியாகவும், ஆன்லைன் போர்டல்களிலும் பெற்றுத் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான முடிவுகளும், பள்ளி வாரியான தரவுகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்களது பள்ளி மாணவர்களின் முடிவுகளை இணையதளங்களில் உள்ள விவரங்களை கொண்டு பதிவிறக்கம் செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.