UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 05:34 PM

திருப்பூர்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நிறைவு பெற்றது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடன், துள்ளிக்குதித்து மாணவ, மாணவியர் தேர்வறையை விட்டு வெளியே வந்தனர்.
கடந்த 26ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மாவட்டத்தில், 15 ஆயிரத்து, 816 மாணவர்கள், 16 ஆயிரத்து, 65 மாணவியர் என மொத்தம், 31 ஆயிரத்து, 881 பேர் தேர்வெழுதினர். நேற்று சமூக அறிவியல் தேர்வுடன் பொதுத்தேர்வு நிறைவு பெற்றது.
மாணவ, மாணவியர் தேர்வறைக்கு வெளியே வந்ததும் ஒருவர் மீது ஒருவர் இங்க் தெளித்தும், பைகளில் எடுத்து வந்த, வண்ணப்பொடியை துாவியும் நண்பர்களின் சீருடைகளில் ஒருவருக்கொருவர் பெயர் எழுதியும் பிரியாவிடை பெற்றனர். உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்களோ இனி, வேறு பள்ளிக்கு போகிறோமே என கண்களில் கண்ணீர் ததும்ப, நண்பர்களை கட்டியணைத்து பிரியாவிடை அளித்தனர். நேற்றைய தேர்வும் எளிதாக இருந்தால், மாணவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தனர்.