10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி
10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 09:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாட்டில் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைப்பெற்றது. தேர்வெழுதிய 8,94,264 மாணவர்களில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட 5.95 % மாணவிகள் அதிக தேர்ச்சி பெறுள்ளனர்.
மாணவர்கள் 3,96,152 (88.58 %) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,22,591 (94.53 %) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 91.55% தேர்ச்சி பெற்றுள்ளனர்.