UPDATED : டிச 05, 2024 12:00 AM
ADDED : டிச 05, 2024 10:26 AM

சென்னை:
இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எப்) 10வது பதிப்பு - 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை ஐஐடி கவுகாத்தியில் நடைபெற்றது.
இந்த ஆண்டு ஐஐஎஸ்எப் தீம் இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுதல் என்பதாகும்.
கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி) பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் நிறுவனத்தின் பணிகளை விளக்கியது. கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் மாடர்ன் ப்ரீபேப் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமை விஞ்ஞானி மற்றும் தலைவர், இயக்குநர் ஜெனரலின் நிர்வாக இயக்குநரகம் மற்றும் அறிவியல் தொடர்பு மற்றும் பரப்புதல் இயக்குநரகம் , சிஎஸ்ஐஆர் முன்னிலையில் டாக்டர் மகேஷ் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.