UPDATED : மார் 27, 2025 12:00 AM
ADDED : மார் 27, 2025 11:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) துவங்குகிறது. தேனி மாவட்டத்தில் 14,792 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர்.பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வினை மாவட்டத்தில் உள்ள 199 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7044 பேர், மாணவிகள் 7191 பேர் என மொத்தம் 14,235 பேர் எழுதுகின்றனர்.
இது தவிர தனித்தேர்வர்கள் 557 பேர் என மொத்தம் மாவட்டத்தில் 14,792 பேர் இத்தேர்வினை எழுதிகின்றனர். இதில் 127 மாற்றத்திறனாளி மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் 68 மையங்களில் நடக்கிறது.
தேர்வு கண்காணிப்பு பணியில் 750 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 10 தேர்வு அறைகளுக்கு ஒரு பறக்கும் படை அலுவர் என மொத்தம் 100 பேர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.