தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


UPDATED : அக் 15, 2025 08:33 AM

ADDED : அக் 15, 2025 08:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2025 08:33 AM ADDED : அக் 15, 2025 08:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில், 10ம் வகுப்பு மாணவர் பயிற்சி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை சம்பக்குளத்தை சேர்ந்தவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவரது, 15 வயது மகன் மேலுார் தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் சேர்ந்து அதற்கான பயிற்சி பெற்று வந்தார்.

சில நாட்களாக, பெற்றோர் உட்பட யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். நேற்று காலை, சிவகங்கையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு பெற்றோர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்தவர் துப்பாக்கியால் தன்னைத்தானே நெற்றியில் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

மாலை வீடு திரும்பிய பெற்றோர், மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us