தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு - பிளஸ் 2 தேர்வு: 61 ஆயிரம் மாணவர் தயார்

10ம் வகுப்பு - பிளஸ் 2 தேர்வு: 61 ஆயிரம் மாணவர் தயார்

10ம் வகுப்பு - பிளஸ் 2 தேர்வு: 61 ஆயிரம் மாணவர் தயார்


UPDATED : நவ 04, 2025 08:57 AM

ADDED : நவ 04, 2025 08:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2025 08:57 AM ADDED : நவ 04, 2025 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது.

வரும், 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், பொதுத் தேர்வை விரைந்து முடிக்க தேர்வுகள் துறை ஆயத்தமாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தகுதியானவர்கள் முதல் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வுகள் பிப். 17 முதல் துவங்க உள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இன்று காலை கல்வி அமைச்சர் மகேஷ் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் தேதி, அட்டவணை குறித்த விபரங்கள் வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் 2025 - 2026 கல்வியாண்டு, 16,155 மாணவர், 16 ஆயிரத்து 429 மாணவியர் என 32 ஆயிரத்து, 584 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும், 13 ஆயிரத்து 28 மாணவர், 15 ஆயித்து 444 மாணவியர் என, 28 ஆயிரத்து 472 பேர் பிளஸ் 2 தேர்வையும் எதிர்கொள்ள உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம், 61 ஆயிரத்து 56 பேர் பொதுத்தேர்வுக்கு தயாராக உள்ள நிலையில், இன்று அட்டவணை வெளியாக உள்ளது. நடப்பு 2025 - 2026 ம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இல்லை என சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us