UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM
ADDED : ஜூலை 31, 2025 09:39 AM

கோவை:
பத்தாம் மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாகவும், மதிப்பெண் பட்டியலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அதற்கான விண்ணப்பத்தை, மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தவுடன் ஆக.,4,5 தேதி களில், தங்களது மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.