UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 05:37 PM
சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் துவங்குகியது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 8ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மாநிலம் முழுதும், 88 மையங்களில் விடைத்தாள் திருத்தம் நடக்கிறது. இதில், 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, தமிழ் வழி மாணவர்களுக்கான விடைத்தாள்களை, தமிழ் வழி ஆசிரியர்களும்; ஆங்கில வழி விடைத்தாள்களை, ஆங்கில வழி ஆசிரியர்களும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.
இந்த விதியை பின்பற்றி மட்டுமே விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; வேறு ஆசிரியர்கள் திருத்துவதால், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டு, நீதிமன்ற வழக்குகள் தாக்கலாவதாக, ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.