UPDATED : மே 08, 2024 12:00 AM
ADDED : மே 08, 2024 09:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற, சேலம் மத்திய சிறை கைதிகள், 11 பேரை அதிகாரிகள் பாராட்டினர்.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், சேலம் மத்திய சிறை கைதிகள், 11 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு எழுதிய, 11 கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில் தண்டனை கைதி ராமலிங்கம், 600க்கு, 409 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கண்ணன், 400 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், வெங்கடேஷ், 391 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.சேலம் சிறை கண்காணிப்பாளர் வினோத், மனஇயல் நிபுணர் வைஷ்ணவி, நல அலுவலர் அன்பழகன், துணை சிறை அலுவலர் சிவா ஆகியோர், தேர்ச்சி பெற்ற கைதிகள், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.