UPDATED : நவ 11, 2009 12:00 AM
ADDED : நவ 11, 2009 12:49 PM
அ நிறம் | அளவு
தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: அக்டோபரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - மெட்ரிக்., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வுகளின் முடிவுகள், நவம்பர் 12ம் தேதி காலை www.dge.tn.nic.in
மதிப்பெண்
சான்றிதழ்களை, 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை, தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டல் விண்ணப்பங்கள், 18ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலை இணைத்து, 20ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.மறு
கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள், இருதாள் கொண்ட பாடத்திற்கு 305 ரூபாய், இதர பாடங்களுக்கு 205 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.