தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/126 தற்காலிக நர்ஸ் பணியிடம்: விண்ணப்பம் வரவேற்பு

126 தற்காலிக நர்ஸ் பணியிடம்: விண்ணப்பம் வரவேற்பு

126 தற்காலிக நர்ஸ் பணியிடம்: விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : செப் 14, 2026 12:40 PM

ADDED : செப் 14, 2026 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 12:40 PM ADDED : செப் 14, 2026 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்ட, தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள, 126 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்கள், தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, மாத சம்பளமாக, 21,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணியிடத்திற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகவல்களை, namakkal.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இது குறித்த விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகம், சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள், உரிய படிவத்தில் வரும், 25 மாலை, 05:00 மணிக்குள் வந்து சேருமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us