தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/13 அரசு பள்ளிகளுக்கு சாம்ராஜ் நகரில் பூட்டு

13 அரசு பள்ளிகளுக்கு சாம்ராஜ் நகரில் பூட்டு

13 அரசு பள்ளிகளுக்கு சாம்ராஜ் நகரில் பூட்டு


UPDATED : ஆக 18, 2023 12:00 AM

ADDED : ஆக 18, 2023 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2023 12:00 AM ADDED : ஆக 18, 2023 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர்:
அரசு பள்ளிகளை சீரமைப்பதாக வாக்குறுதி அளிக்கும் மாநில அரசு, ஒரே மாவட்டத்தின் 13 பள்ளிகளுக்கு பூட்டு போட்டுள்ளது.கர்நாடகாவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும், மாணவர்கள் பற்றாக்குறை உட்பட எந்தக் காரணத்தை கொண்டும், அரசு பள்ளிகள் மூடப்படாது. அவற்றில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்&' என, உறுதி அளிக்கிறது. ஆனால், அதை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகள், சீர் குலைந்த நிலையில் உள்ளன. சிதிலமடைந்த கட்டடம், அடிப்படை வசதிகள் இல்லாதது என, பல காரணங்களால், அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை.இத்தகைய பள்ளிகளை அடையாளம் கண்டு சீரமைப்பதில் ஆர்வம் காண்பிக்காத அரசு, மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதை காரணம் காண்பித்து, பள்ளிகளை மூடுகிறது. சாம்ராஜ் நகரில், அடிப்படை வசதிகள் இல்லாததால், 13 அரசு பள்ளிகளுக்கு அரசு பூட்டு போட்டுள்ளது. இதை கல்வித் துறை துணை இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us