தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஷ்மீரில் சிக்கிய 13 மாணவர்கள் இன்று மாலை பெங்களூரு வருகை

காஷ்மீரில் சிக்கிய 13 மாணவர்கள் இன்று மாலை பெங்களூரு வருகை

காஷ்மீரில் சிக்கிய 13 மாணவர்கள் இன்று மாலை பெங்களூரு வருகை


UPDATED : மே 12, 2025 12:00 AM

ADDED : மே 12, 2025 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2025 12:00 AM ADDED : மே 12, 2025 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
காஷ்மீரில் விவசாய அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ஒரு மாணவி உட்பட 13 மாணவர்கள் இன்று மாலை பெங்களூரு வருகின்றனர்.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒரு மாணவி, 12 மாணவர்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் விவசாய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

13 மாணவர்கள்

கடந்த வாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்தது. இதனால் மாணவர்கள் 13 பேரும், கர்நாடகா திரும்ப முடியாமல் தவித்தனர்.

இவர்களில் மாண்டியா மாவட்டம், சென்னபட்டணாவை சேர்ந்த ஹர்ஷித் என்ற மாணவர், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமியை தொடர்பு கொண்டு, ங்கள் ஜம்முவில் சிக்கிக் கொண்டுள்ளோம். எங்களை மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விஷயம் தொடர்பாக, தனது தந்தையும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமிக்கு அவர் தெரிவித்தார்.

அவரும், பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவரின் உத்தரவுப்படி, ஸ்ரீநகரில் இருந்து பஸ்சில் புறப்பட்ட மாணவர்கள், நேற்று மாலை புதுடில்லி ரயில் நிலையம் வந்தடைந்தனர். இன்று மாலை, பெங்களூரு வருகின்றனர்.

இது குறித்து மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஸ்ரீநகரில் தவித்த கர்நாடக மாணவர்களை பாதுகாக்க, பிரதமரின் உத்தரவின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைத்து மாணவர்களும் புதுடில்லி வந்தடைந்தனர். பெங்களூரு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. என் துறை சார்பில் அதிகாரிகள் கவனித்து கொண்டனர். மாணவர்கள், பாதுகாப்புடன் அவரவர் வீடுகள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் நன்றி

மாணவி பாக்யஸ்ரீ பிரசாத் கூறுகையில், இக்கட்டான சூழ்நிலையிலும் எங்களை பத்திரமாக அழைத்துவர உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மத்திய அமைச்சர் குமாரசாமி உத்தரவின்படி, அதிகாரிகள் எங்களை பத்திரமாக அழைத்து வந்தனர். எங்களுக்கு தைரியம் அளித்து ஊக்குவித்த குமாரசாமி, நிகிலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us