UPDATED : ஜன 14, 2015 12:00 AM
ADDED : ஜன 14, 2015 10:22 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி வேலம்மாள் பள்ளியில் 1330 திருக்குறள் எழுதும் போட்டி நடந்தது.
தேனி வேலம்மாள் வித்யாலயா (சி.பி.எஸ்.இ.,) மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தினம் மற்றும் நடப்பு ஆண்டை மத்திய அரசு திருவள்ளுவர் ஆண்டாக அறிவித்ததை தொடர்ந்து 1330 குறள் எழுதும் போட்டி நடந்தது. 5 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 133 மாணவ,மாணவியர் பங்கேற்று குறள்களை எழுதினர்.
அதை தொடர்ந்து, அந்த குறள்களை கொண்டு திருவள்ளுவர் உருவம் உருவாக்கப்பட்டது. பள்ளி கட்டடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் திருநாள், பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
