UPDATED : மே 23, 2025 12:00 AM
ADDED : மே 23, 2025 08:03 PM
சென்னை:
நாடு முழுதும், 136 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த ஏப்ரலில் 1,000க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில், சளி தொற்று, கிருமி தொற்று, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவைக்கு பயன்படுத்தப்படும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றும் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட, 38 மருந்துகளும் தரமற்றதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் விபரங்களை, https://cdsco.gov.in இணையதளத்தில், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.