UPDATED : நவ 12, 2014 12:00 AM
ADDED : நவ 12, 2014 12:36 PM
உடுமலை: உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், 14 பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
சுகாதாரமான முறையில் சத்துணவு தயார் செய்யும் பொருட்டு, சத்துணவு மையங்களுக்கு காஸ் இணைப்பு வசதி அமைக்க மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உடுமலை நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 14 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள சத்துணவு மையங்களுக்கு காஸ் இணைப்பு இன்று வழங்கப்படுகிறது.
உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜேந்திரா ரோடு மேல்நிலைப் பள்ளி, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளி, கணக்கம்பாளையம், பழனியாண்டவர் நகர், நெல்லுக்கடைவீதி, எக்ஸ்டன்சன் நடுநிலைப் பள்ளி, ருத்ரப்ப நகர் நடுநிலைப் பள்ளி, சதாசிவம் வீதி, தாராபுரம் ரோடு, ஏரிப்பாளையம் நகராட்சி துவக்கப் பள்ளி, எஸ்.கே.பி. அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில், ஒரு சத்துணவு மையத்திற்கு கூடுதல் சிலிண்டருன் கூடிய காஸ் இணைப்பு வசதி வழங்கப்படுகிறது.

