14 மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.6.15 லட்சம் அபராதம்
14 மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ.6.15 லட்சம் அபராதம்
UPDATED : ஜூலை 25, 2025 12:00 AM
ADDED : ஜூலை 25, 2025 12:37 PM
பெங்களூரு:
விதியை மீறி செயல்பட்டு வந்த 14 மருத்துவ நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர், 6.15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளார்.
கர்நாடகா தனியார் மருத்துவ நிறுவனங்க ளின் பதிவு மற்றும் குறை கேட்பு ஆணையம் கூட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. இதில், பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.
அப்போது, தனியார் மருத்துவமனைகள் சட்டத்தை மீறி செயல்பட்டு வந்த 58 மருத்துவ நிறுவனங்கள் குறித்த விபரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
விதிகளை மீறி செயல்பட்டு வந்த வித்யாரண்யபுரா சன்ரைஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கமலாநகர் சர்வ சக்தி ஆலோசனை மையம், பால்யவா சி.கே.மா., கிளினிக், சேஷாத்ரிபுரா ஸ்ரீ சக்தி ஹெல்த் கே, ஹெல்த்லைன் பாலி கிளினிக் ஆகியவை மீது வழக்கு பதிவு செய்யும் படி கலெக்டர் உத்தரிவிட்டார்.
மேலும், விதிகளை மீறி செயல்பட்டு வந்த நகரில் உள்ள 14 மருத்துவ நிறுவனங்களுக்கு, 6.15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.