தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெய்நிகர் கற்றல் தளத்தால் 14.76 லட்சம் பேர் பயன் வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

மெய்நிகர் கற்றல் தளத்தால் 14.76 லட்சம் பேர் பயன் வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

மெய்நிகர் கற்றல் தளத்தால் 14.76 லட்சம் பேர் பயன் வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்


UPDATED : பிப் 06, 2026 12:36 PM

ADDED : பிப் 06, 2026 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 12:36 PM ADDED : பிப் 06, 2026 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: “தமிழக அரசின் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் துறையின் கீழ் இயங்கும் அரசின் மெய்நிகர் கற்றல் தளத்தில் 14.76 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். 5.63 லட்சம் மாணவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விண்ணப்பித்து உள்ளனர்” என திண்டுக்கல் மண்டல வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் அருண்நேரு தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:

அரசின் வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் துறையின் கீழ் மெய்நிகர் கற்றல் தளம் இயங்குகிறது. இதில் மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளான எஸ்.எஸ்.இ., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்டவற்றுக்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுத் தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் என்ற தலைப்பில் 1374 பி.டி.எப்., தரவுகள், டிஜிட்டல் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதற்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தற்போது வரை இதை 14 லட்சத்து 76 ஆயிரத்து 133 பேர் பதிவிறக்கம் செய்து பயனடைந்துள்ளனர். 'மெய்நிகர் தளம்' மூலம் பயிற்சி பெற 5 லட்சத்து 63 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்துள்ளனர். போட்டித்தேர்வர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us