தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/148 காவலர் பணிக்கான தேர்வு 5 மையங்களில் 1,775 பேர் எழுதினர்

148 காவலர் பணிக்கான தேர்வு 5 மையங்களில் 1,775 பேர் எழுதினர்

148 காவலர் பணிக்கான தேர்வு 5 மையங்களில் 1,775 பேர் எழுதினர்


UPDATED : பிப் 09, 2026 02:02 PM

ADDED : பிப் 09, 2026 02:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2026 02:02 PM ADDED : பிப் 09, 2026 02:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் 148 காவலர் பணியிடங்களுக்கு 5 மையங்களில் நடந்த எழுத்து தேர்வில் 1,775 பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரி போலீஸ் துறையில் 148 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுக்கான முதல் தாள் நேற்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை நடந்தது.

லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லுாரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளி உட்பட 5 மையங்களில் தேர்வு நடந்தது.

இத்தேர்வு எழுத உடற்தகுதி தேர்வு மூலம் 1,843 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 1,775 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

68 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா, பார்வையாளராக அரசு செயலர் விக்ராந்த் ராஜா, சார்பு செயலர்கள் ஜெய்சங்கர், முருகேசன் ஆகியோர் தேர்வு பணி மற்றும் தேர்வு மையங்களை பார்வையிடும் பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

மெட்டல் டிடெக்டர் மூலம் தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று ஆகியவை சரிபார்க்கப்பட்டது.

தேர்வர்களின் வருகை பயோ - மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்ட பின், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. முறைகேடுகளை நடக்காமல் இருக்க மொபைல் இன்டர்நெட் சேவைகளை தடுப்பதற்கான ஜாமர் கருவிகளும், அனைத்து தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us