தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/15 நாளில் டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ்- அண்ணா பல்கலை உறுதி

15 நாளில் டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ்- அண்ணா பல்கலை உறுதி

15 நாளில் டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ்- அண்ணா பல்கலை உறுதி


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையில் பட்டம் பெற்ற மாணவர்கள், டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சக்திவேல் வெளியிட்டுள்ள விளக்கம்:
டிரான்ஸ்கிரிப்ட் என்பது மாணவர்களின் உண்மையான சான்றிதழை சரிபார்த்து, எழுத்து வடிவமாக வழங்கப்படும் சான்றிதழ். இது தேர்வுத் துறையின் ஒரு பிரிவால் வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் வேலை தேடும் மாணவர்கள், மேற்படிப்பு படிக்க செல்வோர், இந்த சான்றிதழ் பெறுகின்றனர். இந்த சான்றிதழ் பெற, அண்ணா பல்கலையின் தேர்வுத் துறையால் கேட்கப்பட்ட விபரங்கள் அனைத்தையும், முழுமையாக அளித்திருந்தால் மூன்று முதல் 15 நாட்களுக்குள் அனுப்பப்படுகின்றன. அவ்வாறு முழு விபரங்களை அனுப்ப தவறும் மாணவர்களிடம் மீண்டும் விபரங்கள் பெற்று சான்றிதழ் வழங்கப்படும்.இதன்படி இந்த ஆண்டு மே மாதம் 1,326 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 548 விண்ணப்பங்கள் மூன்று நாட்களிலும், 456 விண்ணப்பங்கள் ஏழு நாட்களிலும் தீர்வு காணப்பட்டன. மேலும் 130 விண்ணப்பங்கள் 15 நாட்களிலும், 52 விண்ணப்பங்கள் 20 நாட்களிலும் தீர்வு காணப்பட்டுள்ளன. 140 விண்ணப்பங்கள் சரியான விபரம் அளிக்காமல் நிலுவையில் உள்ளன.இந்த மாதத்தில் 711 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் மூன்று நாட்களில் 122 விண்ணப்பங்களுக்கும், ஏழு நாட்களில் 250 விண்ணப்பங்களுக்கும், 15 நாட்களில் 162 விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. சரியான விபரங்கள் இல்லாத 177 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. சான்றிதழ் பெறுவதில், குறிப்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் அது குறித்து தேர்வுத் துறையின் கவனத்துக்கு கொண்டு வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us